சினிமா செய்திகள்

‘உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டு…’- தல அஜித் அறிக்கைக்கு ரசிகர்கள் பதில் போஸ்டர்..!

Published

on

தல அஜித் கொடுத்த அறிக்கைக்கு பதில் கொடுக்கும் விதமாக தல அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் இயக்குநர் விநோத் தயாரிப்பாளர் போனி கபூர் என்னும் காம்போ தமிழ் சினிமாவில் உருவானது. அதன் பின்னர் மீண்டும் இதே காம்போ இணைந்து வலிமை படத்தை உருவாக்கி வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகள் என மாறிமாறி தாமதமாகி வலிமை படப்பிடிப்பே இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை.

படப்பிடிப்பே முடியாத போது எங்கிருந்து வலிமை பட அப்டேட் கிடைக்கும். ஆனால், ரசிகர்கள் தங்களது ஆர்வ மிகுதியால இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் முதல் பிரதமர் மோடி வரை அத்தனை பேரிடமும் அப்டேட் கேட்கத் தொடங்கிவிட்டனர். இதனால், தல அஜித் உடனடியாகத் தனது ரசிகர்களிடம் அறிக்கையின் மூலம் கோரிக்கை வைத்தார். அப்டேட் கொடுக்கப்படும் என்றும் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் அதுவரையில் செல்லும் இடங்களில் எல்லாம் அப்டேட் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட தல அஜித் ரசிகர்கள் அவருக்குப் பதில் அளிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். குறிப்பாக மதுரை தல ரசிகர்கள் மதுரை நகர் முழுக்க இந்தப் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டு காத்திருக்கோம் தல’ என அச்சடித்துள்ளனர்.

மதுரை தல ரசிகர்களின் இந்த போஸ்டர் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version