சினிமா செய்திகள்

தல அஜித் படத்தில் குத்தாட்டம் போடும் பாலிவுட் நடிகை!

Published

on

சமூக வலைதளங்களில் சண்டையிடுவது தொடங்கி, எல்லை மீறிய கவர்ச்சி காட்டி நடிக்கும் பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் படமாக நேர்கொண்ட பார்வை இருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கும், தல ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் பல மாறுதல்களை படத்தில் புகுத்தி உள்ளார் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய இயக்குநர் எச். வினோத்.

பிங்க் படத்தில் அமிதாப் பச்சனுக்கு நாயகி இல்லை. ஆனால், தல அஜித்துக்கு வித்யாபாலனை ஜோடியாக்கி, இருவருக்கும் ஒரு டூயட்டையும் வைத்துள்ளார்.

தற்போது, படத்தில் இடம்பெறும் ஒரு குத்தாட்ட பாடலுக்கு பாலிவுட் நடிகை கல்கி கோச்லினை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version