வைரல் செய்திகள்

‘தல’ அஜித்- ஷாலினி லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோ… வைரல்!

Published

on

தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இணைந்து எடுத்துள்ள சமீபத்திய ரொமான்டிக் போட்டோ ஒன்று இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தல அஜித் தற்போது வலிமை படத்துக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இவர் இன்று சென்னையில் வீதிகளில் மக்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது ஒருபுறம் வைரல் ஆகிக் கொண்டிருக்க மற்றொரு புறம் மனைவி ஷாலினி உடன் சமீபத்தில் எடுத்துக் கொண்டுள்ள ரொமான்டிக் புகைப்படமும் இன்று ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தைத் தற்போது சமுக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் வேகமகா ஷேர் செய்தி வருகின்றனர். 2000-ம் ஆண்டு நடிகர் அஜித் உடன் காதல் திருமணத்தில் இணைந்த ஷாலினி அதன் பின்னர் சினிமா துறையைவிட்டு முழுவதுமாக விலகி விட்டார். அதன் பின்னர் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் சிறிது காலம் கவனம் செலுத்திய ஷாலினி தற்போது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி தமிழ் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார். அதுவும் தனது ஆஸ்தான இயக்குநர் ஆன மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் ஷாலினி. இயக்குநர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் வரலாற்றுத் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்தப் படத்தில் தான் முக்கியமான வரலாற்றுக் கதாபாத்திரமாக நடிக்க உள்ளார் ஷாலினி அஜித்.

Trending

Exit mobile version