சினிமா செய்திகள்

சாலையோர உணவக நட்பு… ஹோட்டல்காரரின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்ற ‘தல’ அஜித்!

Published

on

நடிகர் அஜித் வழக்கமாக செல்லும் உணவகம் ஒன்றை நடத்துபவரின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்ற்கொண்டுள்ளார்.

நடிகர் அஜித் தற்போது வலிமை திரைப் படத்துக்கான படப்பிடிப்புக்காக சமீப காலமாக ஹைதராபாத்தில் தங்கி இருந்தார். கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக பெரும்பான்மையான தென்னிந்தியத் திரைப்படங்கள் தற்போது ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியிலேயே படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இதனால் ஃபிலிம் சிட்டியில் இரவு நேரத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது பைக்கில் தல ஹைதராபாத் நகரை வலம் வருவாராம். அந்த சமயம் எல்லாம் சாலை ஓரங்களில் உள்ள உணவகங்களில் தான் சாப்பிட்டுள்ளார். அப்படி ஒரு உணவகத்துக்கு வழக்கமாக செல்லத் தொடங்கிய அஜித் அந்த உணவகத்தை நடத்துபவரிடம் நட்புடன் பழகத் தொடங்கியுள்ளார்.

ஒரு நாள் அந்த உணவகம் நடத்துபவரின் குடும்பம் குறித்துக் கேட்ட போது அவரது ஏழ்மை நிலை அஜித்துக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் அவரது குழந்தைகளுக்கான கல்விச் செலவைக் கேட்டறிந்து உடனடியாக ஒரு லட்ச ரூபாயை அந்த இடத்திலேயே கொடுத்துவிட்டு வந்துள்ளார் தல அஜித்.  அஜித்துக்கு படங்களுக்காக மட்டுமின்றி அவரது எளிமை, மனிதநேயம் ஆகிய பண்புகளுக்காகவுமே அதிக ரசிகர்கள் அவருக்கு இருப்பதாக பல ரசிகர்களே தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version