சினிமா செய்திகள்

‘தல 61’ அப்டேட்… 14 ஆண்டுகளுக்குப் பின் விஜய் உடன் இணையும் அஜித்..?

Published

on

நடிகர் அஜித்-ன் 61-வது திரைப்படம் குறித்தத் தகவல்கள் வெளி வந்துள்ளன.

‘தல’ அஜித் தற்போது தனது 60-வது திரைப்படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் விநோத் இயக்கத்தில் வலிமை படம் உருவாகி வருகிறது. பல கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பே இன்னும் முழுவதுமாக முடியாது நிலையில் தல 61 குறித்தத் தகவல்கள் வெளி வரத் தொடங்கி உள்ளன.

தனது 61-வது படத்துக்காக தல அஜித் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு இயக்குநருடன் இணைய உள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் கிரீடம் பட இயக்குநர் ஆன ஏ.எல்.விஜய் தான் ‘தல 61’ படத்தையும் இயக்க உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன. ஏ.எல்.விஜய் தற்போது நடிகை கங்கனா ரணாவத் நாயகியாக நடிக்கும் ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார்.

‘தலைவி’ திரைப்படம் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம். இந்தத் திரைப்படம் நிறைவடைந்த பின்னர் அஜித் உடனான படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version