சினிமா செய்திகள்

’தல 61’ படத்தின் படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்

Published

on

தல அஜித் நடித்து முடித்துள்ள 60வது திரைப்படமான ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் சிங்கிள் பாடல்கள் மற்றும் டீசர் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஆயுத பூஜை தினத்தில் திரை அரங்குகளில் இந்த படத்தை பிரமாண்டமாக வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்க உள்ளார் என்றும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அஜித், எச்.வினோத், போனிகபூர் ஆகியோர்கள் இணையும் மூன்றாவது திரைப்படம் இது என்பதும் ஏற்கனவே ’நேர்கொண்ட பார்வை’ ’வலிமை’ ஆகிய படங்களில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஒரு குறுகிய கால படம் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

’தல 61’ படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version