தமிழ்நாடு

மீண்டும் மாற்றப்படுகிறதா தமிழ்ப்புத்தாண்டு?

Published

on

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தமிழ்புத்தாண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்

கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று என்று இருந்த நிலையில் திடீரென முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என மாற்றினார்

அந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்/ இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பொங்கல் பண்டிகையின்போது நியாயவிலை ரேஷன் கடை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச பொருள்கள் கொண்ட துணிப்பை இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட துணிப்பை குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

எனவே விரைவில் மீண்டும் தமிழ் புத்தாண்டு தை 1ஆம் தேதி தான் என தமிழக அரசு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது/ ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசின் விடுமுறை குறித்த அறிவிப்பில் சித்திரை ஒன்றாம் தேதி தான் தமிழ் புத்தாண்டு என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Trending

Exit mobile version