தமிழ்நாடு

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை: அமைச்சர் அறிவிப்பு!

Published

on

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ஐந்து முக்கிய சிக்னல்கள் இருப்பதால் இந்த சிக்னல்களை தாண்டி செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு மேலாக வாகனங்களுக்கு ஆகிறது. இந்த நிலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றபோது அதில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூ 485 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .

எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனெடாப் சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்பு என ஐந்து சிக்னல்களை கடந்து வாகனங்கள் செல்ல இருப்பதால் இதனை தவிர்க்கும் வகையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

Trending

Exit mobile version