தமிழ்நாடு
இன்று முதல் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வுத்துறை அறிவிப்பு!
ஆசிரியர் தகுதி தேர்வு என்று கூறப்படும் TET தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
TET தேர்வு என்று கூறப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 13 என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
தேர்வு கட்டணம் ரூபாய் 500 என்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு கட்டணம் ரூபாய் 250 என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது
டெட் தேர்வு என்பது இரண்டு தாள்களைக் கொண்டது என்பதும் இடைநிலை பயிற்சி ஆசிரியர் முடித்தவர்கள் தாள்-1 எழுத வேண்டும் என்பதும் பிஎட் முடித்தவர்கள் தாள்-2 எழுத வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த தேர்வு குறித்து தகவல்கள் தெரிவதற்கு http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியை அணுகலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது