வணிகம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்ட பில்கேட்ஸ்.. முதலிடம் யார்?

Published

on

உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த பில்கேட்ஸை, மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளிய்யுள்ளார் டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்.

எலன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 9 லட்சத்து 46 ஆயிரம் கோடியாக அதிகரித்ததை அடுத்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முதல் இடத்தில் உள்ளார். 2017-ம் ஆண்டு இந்த முதல் இடத்தை ஜெஃப் பிசோஸ் பிடித்தார். அதற்கு முன் பல ஆண்டுகள் பில்கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலிருந்து வந்தார்.

எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் விலை அதிகரித்ததே, எலன் மஸ்கின் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version