தமிழ்நாடு

ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கில் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்: வழிகாட்டு நெறிமுறைகள்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து சென்னையில் மட்டும் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் தகுந்த காரணம் இல்லாமல் வெளியே வருபவர்களை எச்சரித்து அனுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கும் போது போலீசார் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:

* அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் தடை செய்யக்கூடாது

* அடையாள அட்டையுடன் பயணம் செய்யும் பணியாளர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்

* நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் உடனடியாக அனுமதிக்க வேண்டும்

* அவசர காரணங்கள் வெளியூர் செல்வோர் பணி முடிந்து வீடு திரும்பும் ஆகியோரையும் அனுமதிக்கவேண்டும்

* ஊரடங்கு வாகன சோதனையின் போது காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாகவும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

* பத்திரிகை, மருத்துவம், மின்சாரம், சரக்கு, பால் மற்றும் எரிபொருள் ஆகிய அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்

இவ்வாறு போலீசாருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version