இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில்: கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி!

Published

on

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று முதல், மாத பூஜைக்காக திறக்கப்பட்டது என்பதும் இதில் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் தெரிந்ததே. ஜூலை 17 முதல் 21 வரை ஐந்து நாட்களுக்கு சபரிமலை கோவில் திறந்திருக்கும் என்றும் அப்போது தினமும் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கேரள மாநில அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் அதே நேரத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தபோதிலும் 5 ஆயிரம் பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பத்தாயிரம் மக்கள் அனுமதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் பக்தர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத பக்தர்கள் கோவிலில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 21ஆம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்து இருக்கும் என்பதால் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து கடைசி இரண்டு நாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமாக கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version