தமிழ்நாடு

சென்னை ஐ.ஐ.டி.யில் 10 மாணவர்களுக்கு கொரோனா: பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவு

Published

on

சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 7 மாணவர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது .

இந்த நிலையில் மீண்டும் நான்காவது அலை இந்தியாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில மாநிலங்களில் மாஸ்க் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளி வந்த நிலையில் தற்போது மேலும் ஏழு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

இந்த நிலையில் ஐஐடி வளாகத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version