தமிழ்நாடு

சென்னையில் புகழ் பெற்ற 10 ரூபாய் டாக்டர் காலமானார்: முக ஸ்டாலின் இரங்கல்!

Published

on

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் டாக்டர் கோபால் என்பவர் பத்து ரூபாய்க்கு ஏழைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் என்பதும் அதனை அடுத்து ஓய்வு பெற்றதும் வண்ணாரப்பேட்டை பகுதியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண நோயாளிகளுக்கு 10 ரூபாயும் வயதானவர்களாக இருந்தால் இலவசமாகவும் மருத்துவம் பார்த்து வந்தார். இவரை அந்த பகுதி மக்கள் கடவுள் போல் வழிபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென டாக்டர் கோபால் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளதை அடுத்து வடசென்னை மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து கண்ணீருடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்து ரூபாய் டாக்டர் கோபால் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த சமூக சேவை மருத்துவர் திரு. கோபால் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எவருக்கும் எளிதில் கிடைத்திடாத ’10 ரூபாய் டாக்டர்’ என்ற அடைமொழியை மருத்துவத்தை சேவையாகச் செய்து பெற்றவர்! பல்லாண்டுகள் பேசப்படும் அவரது புகழ்! ஆழ்ந்த அஞ்சலி.

Trending

Exit mobile version