தமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் 10 புதிய கல்லூரிகள்: எந்தெந்த பகுதியில் என அறிவிப்பு!

Published

on

அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் 10 புதிய அரசு மற்றும் கலை கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நிதி மற்றும் மனித வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தை சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யும்போது, 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஆகஸ்டு 26-ஆம் தேதி உயர் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தவும் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய 9 இடங்களில் புதிய இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும்.

அதேபோல் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் ஒரு புதிய மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும். இவ்வாறு அரசாணையில்

author avatar
seithichurul

Trending

Exit mobile version