தமிழ்நாடு

கோவில் கோவிலாக சுற்றும் சசிகலா: அரசியலுக்கு முழுக்கா?

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. சிறையிலிருந்து விடுதலையான வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் குதிப்பார் என்றும் அதிமுகவை கைப்பற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் கிட்டத்தட்ட அரசியல் இருந்து அவர் விலகியது போன்ற ஒரு அறிக்கை வெளியானது அதிமுகவில் உள்ள அனைவருக்கும் நிம்மதியை தந்தது. மேலும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட எந்த கட்சிக்கும் அவர் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை என்பதும் அரசியலில் இருந்து கிட்டத்தட்ட முழுதாகவே வெளியேறி விட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் தஞ்சை பகுதியில் உள்ள கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் தற்போது அவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தியாகராஜர் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

ஆன்மீக பயணத்தில் தற்போது முழு ஈடுபாட்டுடன் அவர் இருப்பதால் அரசியலில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாகவே கருதப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version