தமிழ்நாடு

அகவிலைப்படி 17%ல் இருந்து 31%மாக உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Published

on

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது அறிவிப்புகள் அனைத்தும் பொதுமக்கள் வரவேற்பு பெற்று வருகின்றன என்பது தெரிந்ததே.

அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களுக்கும் அவர் அவ்வப்போது சலுகைகளை அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படியை திருக்கோயில் பணியாளர்கள் இதுவரை 17 சதவீதம் என பெற்று வந்த நிலையில் தற்போது அது 31% ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் திருக்கோவிலில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தற்போது பொங்கல் கருணைக்கொடை தொகையாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டிலிருந்து இந்த கருணைக்கொடை தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

முதல்வர் முக ஸ்டாலினின் இந்த அறிவிப்பு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் அவர்கள் முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version