தமிழ்நாடு

கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம்: அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழக கோயில்களில் 5 ஆண்டு பணி புரிந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பதே தெரியாத நிலை பலருக்கும் இருந்த நிலையில் இந்த ஆட்சியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் தினந்தோறும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார் என்பதும் கோயில்நிலங்கள் ஆக்கிரமிப்பை மீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோயில் நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இணையதளத்தில் பதிவு செய்யவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் திமுக ஆட்சியில் கோயில்களில் பணி செய்யும் ஊழியர்களுக்கு நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவில் இருந்து தமிழகம் விடுபட்டு நலம் பெற இறைவனை வேண்டுவோம் என்றும் அவர் பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார். ஐந்து ஆண்டுகள் கோயில்களில் பணி புரிந்தால் பணி நிரந்தரம் என்ற அறிவிப்பு கோயில் ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version