தமிழ்நாடு

மதுரையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட ‘புனித கோயில்’- திறந்து வைக்கும் எடப்பாடியார் – என்ன ஸ்பெஷல்?

Published

on

மதுரையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு கட்டப்பட்ட கோயிலை இன்று திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மதுரையின் கல்லுப்பட்டி பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார் தரப்பில் இக்கோயில் கட்டப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அவர், ‘அம்மா ஜெயலலிதாவை, பல பெண் தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி நாங்கள் அழைப்போம். இதய தெய்வம், காவல் தெய்வம், குலசாமி என்ற பெயர்களைச் சொல்லி அவரை அழைப்போம். இந்தக் கோயில் அதற்கு நியாயம் சேர்க்கிறது. இந்தக் கோயிலுக்கு வருபவர்கள், வணங்கிச் செல்ல போதுமான இடத்துடன் கட்டுமானம் அமைக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் தங்கள் வாழ்க்கையில், இந்த நாட்டிற்காக பலவற்றை தியாகம் செய்துள்ளார்கள். எனவே அவர்களை தெய்வங்களாக நாங்கள் கருதுகிறோம்’ என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் தான், சென்னையில் ஜெயலலிதாவுக்கு 80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் திறக்கப்பட்டது. அதேபோல சென்னையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில், ஜெயலலிதாவிட் முழு உருவச் சிலையும் திறக்கப்பட்டது. அவர் வாழ்ந்து மறைந்த, போயஸ் தோட்டத்தில உள்ள வேதா இல்லமும், மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவுக்கு கோயிலும் திறக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இப்படியான அடுத்தடுத்த விஷயங்கள் மின்னல் வேகத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version