வைரல் செய்திகள்

நடிகர் சோனு சூடு-க்கு கோயில் கட்டிய கிராமம்… நெகிழும் நடிகர்..!

Published

on

நடிகர் சோனு சூடு-க்கு ஒரு கிராமமே இணைந்து சிலை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டியுள்ளது.

அருந்ததி திரைப்படம் மூலம் தென்னிந்திய மக்களிடம் பிரபலமானவர் சோனு சூட். பல சமுக நற்பணிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து பலருக்கும் கடவுளாகவே கருதப்பட்டு வருபவர்.

கல்வி, விவசாயம், சுய தொழில் என யார் எது கேட்டாலும் தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் சோனு சூடு செய்து வருகிறார். ஆந்திராவில் சித்திபேட் என்னும் கிராமத்தினர் நடிகர் சோனு சோடு தங்களுக்கு செய்த உதவிகளுக்கு எல்லாம் நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டியுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் சோனு சூடு, “இதற்கெல்லாம் நான் தகுதியானவனே இல்லை. நான் ஒரு சாதாரண மனிதனாகவே என்னைப் பார்க்கிறேன்” எனப் பதிலளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version