தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

தமிழ்நாட்டின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணத்தால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழ்நாட்டின் வளிமண்டலப் பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து சென்று விட்டது. இதனால் தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

கோடை வெப்பம்

சென்னையில் மட்டும் 2வது நாளாக நேற்றும், வெப்பம் சதத்தை தாண்டியுள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் 105 டிகிரி செல்சியஸ் அதாவது 44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேலாக வெப்பம் பதிவாகி உள்ளது.

உயரும் வெப்பநிலை

3 வருடங்களுக்குப் பின்னர், சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி செல்சியஸ் கோடை வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு கோடை வெப்பம் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கும் எனவும், சென்னையில் மட்டும் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கோடை வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகளவு வெப்பநிலை மற்றும் வெப்ப அழுத்தத்தின் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் மிகவும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version