இந்தியா

மோடியை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும்: முதல்வர் காட்டமான விமர்சனம்!

Published

on

பிரதமர் மோடியையும் அவரது பாஜக கட்சியையும் தூக்கி வங்க கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ஆவேசமாக விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருப்பது பாஜக என்பதும் மத்தியிலும் ஆட்சி செய்து வருவது பாஜக என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாஜக மீது எதிர்க்கட்சிகள் மற்றும் பல மாநில முதல்வர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதும் அவரது அணுகுமுறையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவையும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். இவர் தற்போது மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதிகாரத்திலிருந்து பாஜக அகற்றப்பட்டு வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என்றும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க மாட்டோம் என்றும் நாட்டுக்கு எது தேவையோ அதை செய்வோம் என்றும் காட்டமாக தரிசனம் செய்துள்ளார். அவரது இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக ” பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை (மதிப்புக் கூட்டு வரி) மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்த மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. தெலுங்கானா இராட்டிர சமிதி பதவியேற்ற பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட வில்லை. அப்படி இருக்கையில், அதனைக் குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒருபோதும் எழவில்லை. எந்த முட்டாள் உயர்த்தினாரோ, அவர் தான் குறைக்க வேண்டும்! எங்களை குறைக்க சொல்வது அர்த்தமற்றது” என இவர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version