சினிமா செய்திகள்

தெலுங்கு மெகா ஸ்டார்கள் படங்களின் ரிலீஸ் தேதிகள் தொடர்ச்சியாக அறிவிப்பு!

Published

on

இன்று ஒரே நாளில் தெலுங்கு மெகா ஸ்டார்களின் திரைப்படங்கள் வரிசையாக ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முதல்கட்டமாக எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பவன் கல்யாண் நடிக்கும் ’பீம்லா நாயக்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 25 அல்லது மார்ச் 1ஆம் தேதி ரிலீஸாகும் என சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது

அதேபோல் சிரஞ்சீவி நடித்த ’ஆச்சார்யா’ திரைப்படம் ஏப்ரல் 29-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபாஸ் நடித்த ’ராதேஷ்யாம்’ திரைப்படம் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன

தமிழ் திரையுலகை பொருத்தவரை விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதியும், விஷ்ணு விஷாலின் ’எப்ஐஆர்’ மற்றும் விஜய் சேதுபதியின் ’கடைசி விவசாயி’ ஆகிய திரைப்படங்கள் பிப்ரவரி 11ம் தேதி ரிலீசாக உள்ளது

அதேபோல் அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதியும், சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் மார்ச் 25ம் தேதியும் தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ ஏப்ரல் 14ஆம் தேதியும் யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

seithichurul

Trending

Exit mobile version