சினிமா செய்திகள்

பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

Published

on

பிரபல நடிகர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் ராஜா பாபு. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சற்று முன் அவர் சிகிச்சையின் பலன் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரபல தெலுங்கு நடிகர் ராஜா பாபு அவர்களுக்கு வயது 64 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜபாபு. இவர் ’ஊரிக்கு மோனக்காடு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் வெங்கடேஷ், மகேஷ்பாபு ஆகிய முன்னணி நடிகர்களுடன் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் ராஜபாபு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் ஆந்திர மாநில அரசின் நந்தி விருது உள்பட ஒரு சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மறைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்/ நடிகர் ராஜ்குமார் அவர்களின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version