சினிமா செய்திகள்

பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன்; தெலுங்கானா என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாரா!

Published

on

தெலுங்கானா மாநிலத்தில் 27 வயது கால் நடை மருத்துவரான திஷா (பெயர் மாற்றம்) பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளைக் கைது செய்த காவல் துறை என்கவுட்டர் செய்தது.

என்கவுட்டரில் ஈடுபட்ட காவலர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறனர். தற்போது நயன்தாரா இந்த என்கவுண்டருக்கு ஆதரவாக நயன்தாராவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று இன்று உன்மையாகியிருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாகப் பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராகத் தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள்.

பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்திச் சொல்வேன்.

நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்குச் சரியான நியாயம் கிடைத்த நாளாகக் குறித்து வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த நடவடிக்கை சற்றேனும் பயன்தரும்.

மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவது, அன்பு செலுத்துவதும், இரக்கம் செலுத்துவதும் ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்குப் பெண் பாதுகாப்பு குறித்து கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்குப் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்று தர வேண்டும். பெண்களை மதிப்பவன் தான் பாதுகாப்பான நாயகன் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

எதிர்கால உலகைப் பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்துகொள்ள முடியும்.” என்று அறிக்கையில் நயன்தார குறிப்பிட்டு இருந்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version