உலகம்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது: காரணம் என்ன தெரியுமா?

Published

on

பிரபல மெசேஜிங் பயன்பாடு டெலிகிராமின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் பாவெல் துரோவ், பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிகிராம் செயலியில் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, டெலிகிராம் செயலியின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களால், பல குற்றவாளிகள் அந்த செயலியை தவறாக பயன்படுத்துவதால் எழுந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எந்தவித கண்காணிப்பும் இல்லாமல் குற்றச்செயல்கள் பரவுகின்றன என கூறப்படும் வழக்கின் அடிப்படையில், பாவெல் துரோவ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாவெல் துரோவ் தற்போது பிரான்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார், மேலும் இந்த வழக்கு உலக அளவில் டெலிகிராம் செயலியின் எதிர்காலத்தைப் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு நபர்கள் சட்ட விரோதமாகத் திரைப்படங்கள் போன்றவற்றை டெலிகிராம் செயலி மூலமாகப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது, மேலும் பல்வேறு மோசடி கும்பல்கள் ஆன்லைன் மூலமாகப் பணம் சம்பாதிக்கலாம் என மோசடி செய்து வருவதும் அதனால் பலர் தங்கள் பணத்தை இழந்து தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tamilarasu

Trending

Exit mobile version