இந்தியா

கொரோனா பாதிப்பால் மாணவியை உள்ளே விடாத கிராமத்தினர்!

Published

on

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை கிராமத்தினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாநிலங்களைப் போலவே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த சிறுமியை கிராமத்திற்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனை அடுத்து வேறு வழியில்லாமல் வயல்வெளியில் ஒரு சின்ன குடிசையை அவரது பெற்றோர்கள் போட்டுக் கொடுக்க அதில் தான் அந்த சிறுமி 13 நாட்களாக இருந்ததாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த கிராமத்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் என்றாலும் கிராமத்திற்குள் உள்ளே நுழைய விடக்கூடாது என்பது தவறானது என்றும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version