இந்தியா

2 மணிநேரம் தாமதமாக வந்த தனியார் ரயில், ரூ.4 லட்சத்தைப் பயணிகளுக்கு இழப்பீடாக வழங்கிய ஐஆர்சிடிசி!

Published

on

இந்தியாவின் முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் 2.5 மணி நேரம், 1 மணி நேரம் தாமதமாக வந்ததால், 2035 பயணிகளுக்கு மொத்தமாக 4.5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும் நிலைக்கு ஐஆர்சிடிசி தள்ளப்பட்டுள்ளது.

லக்னோவிலிருந்து டெல்லி சென்று வரும் தனியார் தேஜஸ் ரயில் சென்ற சனிக்கிழமை டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக 2.30 மணி நேரம் தாமதமாகச் சென்றது. அதே போன்று லக்னோவிலிருந்து செல்லி செல்லும் போது 1 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாக ரயில் சென்றுள்ளது.

ரயில் தாமதமாகச் சென்றால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. அதன்படி ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றால் 100 ரூபாயும், 2 மணி நேரங்களுக்கு மேலாகத் தாமதமானால் 250 ரூபாயும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அதன்படி ஐஆர்சிடிசி நிறுவனம் தேஜஸ் ரயில் பயணிகளுக்கு 1574 பயணிகளுக்கு தலா 250 ரூபாய் என 93,500 ரூபாயும், 561 ரயில் பயணிகளுக்கு 150 ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வளவு பெரிய இழப்பீடு தொகையை ஐஆர்சிடிசி பயணிகளுக்குத் திருப்பி வழங்குகிறது.

ஒரு முறை பணி மூட்டம் காரணமாக 2 மணி நேரம் ரயில் தாமதம் ஆகி 1500 ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி இழப்பீடு வழங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் போது நிறுத்தப்பட்ட தேஜஸ் ரயில் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தனது சேவையை மீண்டும் தொடங்கியது.

முடிந்தவரையில் 99.9 சதவீதம் தேஜஸ் ரயில் தாமதமாகச் சென்றதில்லை என ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version