உலகம்
நிர்வாணப்படங்களை அனுப்பி ஆபாசமாக சாட் செய்த இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
சுவிட்சர்லாந்தில் இளம்பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் ஆபாசமாக சமூக வலைதளமான ஸ்நாப்சாட்டில் சாட் செய்து வந்துள்ளார். அதில் அவர் அந்த இளைஞருக்கு தனது நிர்வாணப்படங்களை அனுப்ப அது அவருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது.
இளம்பெண்ணுடன் ஆபாசமாக பழகி அவருடைய நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்ட அந்த இளைஞர் அதனை வைத்து அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார். தான் கேட்கும் பணத்தை தராவிட்டால் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார் அந்த இளைஞர். இதனையடுத்து அந்த இளம்பெண் 400 சுவிஸ் ஃப்ராங்குகளை அந்த நபருக்கு கொடுத்துள்ளார்.
ஆனாலும் அந்த நபர் மேலும் பணம் கேட்டு மிரட்ட இளம்பெண் வேறு வழியில்லாமல் போலீசாரை தொடர்புகொண்டு நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறை ஸ்னாப்சாட் நிறுவனத்திடம் இருந்து அந்த இளைஞரின் விவரங்களை பெற்று அதிரடியாக அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் தான் மிரட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.