தமிழ்நாடு

வரதட்சனை கொடுமை: உன் மகள் தூக்கு போட்டு இறந்துவிட்டாள் அவளது உடலை தூக்கிக்கொண்டு போ!

Published

on

கரூரில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் திருமணமான ஒரு வருடத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள ஜூவானந்த்திற்கும், நெரூர் சின்ன காளிபாளையத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது. கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ஜீவானந்தம். இவர் திருமணமான சில மாதங்களிலேயே கார் வாங்குவதற்கு மூன்று லட்சம் ரூபாய் அனிதாவை கொடுமைப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஜீவானந்தம் அனிதாவின் தாயாருக்கு போன் போட்டு, உன் மகள் தூக்கு போட்டு இறந்துவிட்டாள். வந்து அவளது உடலை தூக்கிக்கொண்டு போ என கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதாவின் தாய் தனது உறவினர்களுடன் அங்கு சென்றுபோது தனது மகள் அனிதா இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், வரதட்சணை கேட்டு கொடுமை செய்து அனிதாவை கொன்றுவிட்டதாக ஜீவானந்தம் மற்றும் அவனின் தாயார் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசில் புகார் அளித்த அவர்கள், ஜீவானந்தம் அவனது தாய் லட்சுமி மற்றும் பாட்டி ஆகியோரை கைது செய்த பின்னரே அனிதாவின் உடலைப் பெற்றுக்கொள்வோம் எனத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version