சினிமா செய்திகள்

சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் இணையும் ’அசுரன்’ நடிகர்..!

Published

on

சிம்புவின் பத்து தல படத்தில் புதிதாக அசுரன் படப்புகழ் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு வருகிற பொங்கல் பண்டிகையின் போது ஈஸ்வரன் படம் வெளியாக உள்ளது. அதற்கு அடுத்து மாநாடு படமும் தயார் நிலையில் உள்ளது. தற்போது கெளதம் கார்த்திக் உடன் இணைந்து பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் புதிதாக அசுரன் படப்புகழ் டீஜே இணைந்துள்ளார்.

அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பத்து தல படக்குழுவினர் டீஜே படத்தில் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கன்னட மொழியில் வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆக இந்தப் படம் இருக்கும்.

இதில் சிம்பு டான் ஆகவும் கெளதம் போலீஸ் ஆகவும் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்ரன. இந்த சூழலில் சிம்பு உடன் முதல் முறையாக ஜோடி சேர நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version