உலகம்

வேலைநீக்கம் செய்த நிறுவனங்களில் இணைந்த டெல்.. 6500 பேரை வீட்டுக்கு அனுப்பிய சோகம்..!

Published

on

உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது டெல் நிறுவனமும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்பட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் குறிப்பாக கூகுள் நிறுவனம் 12000 பேர்களை வேலை நீக்கம் செய்ததை ஜீரணிக்கவே முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பதால் சிக்கன நடவடிக்கைக்காக வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டெல் நிறுவனம் தங்களது 6500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் 5% என்பது குறிப்பிடத்தக்கது. டெல் நிறுவனம் தொடர்ந்து நிச்சயமற்ற எதிர்காலத்துடன் இருந்து வருவதால் சந்தை நிலைமைகளை சமாளிக்க வேலை நீக்க நடவடிக்கை அவசியமாகிறது என்று டெல் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதற்கு முன்பு பொருளாதாரம் சவால்களை சந்தித்துள்ளோம் என்றும் ஆனால் தற்போது வேறு வழியில்லாமல் வேலை நீக்கம் செய்கிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் டெல் நிறுவனம், பெர்சனல் கம்ப்யூட்டர்களை ஏற்றுமதி செய்துவரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் 37% விற்பனை சரிவை கண்டுள்ளதாகவும் டெல் அதன் வருவாயில் 55 சதவீதத்தை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் புதிய பணியாளர்களை பணியில் அமர்த்துவதை முதலில் நிறுத்திய டெல் நிறுவனம் தற்போது அடுத்த கட்டமாக வேலை மிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை போதாது என்றும் மேலும் சில நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் டெல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணி நீக்கங்களுக்கு பிறகு டெல் நிறுவனத்தின் பணியாளர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 300 என இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் டெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் தயாரிப்புகளின் தேவை மிகப் பெரிய அளவில் சரிவை கண்டதாகவும் அதன் காரணமாக ஒட்டுமொத்த நிறுவனம் தற்போது கடினமான பாதையில் செல்வதாகவும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version