இந்தியா

இந்தியாவில் மட்டும் 45,000 வேலைவாய்ப்புகள்: AI தொழில்நுட்பத்திற்கு பிரகாசமான எதிர்காலம்..!

Published

on

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு என்ற AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. AI தொழில்நுட்பம் காரணமாக வேலை வாய்ப்புகள் பரிபோகும் ஆபத்து இருப்பதாக ஒரு பக்கம் சிலர் சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் AI தொழில்நுட்பம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பாக அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு இந்தியாவில் மட்டும் 45 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளது என TeamLease Digital என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டேட்டா விஞ்ஞானிகள் மற்றும் எம்எல் என்று கூறப்படும் இயந்திர கற்றல் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்திற்கு தேவைப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

இந்தியாவின் டேட்டா இன்ஜினியரிங் பணிகளில் ஆண்டுக்கு 14 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த வேலைகளுக்கு ஆட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள் என்றும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் எம்எல் இன்ஜினியர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய டேட்டா விஞ்ஞானிகள் தலா 14 லட்சம் வரை சம்பாதிப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த வேலைக்கு அதிக அளவு ஆட்கள் தேவைப்படும் என்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் படித்து முடித்த உடனே வேலை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த துறையில் ஒரு சில வருடங்கள் அனுபவம் இருந்தால் ஆண்டுக்கு 25 முதல் 45 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறலாம் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் காரணமாக ஒரு சில வேலை வாய்ப்புகள் பறிபோனாலும் இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்திற்கு வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று இந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. AI தொழில்நுட்பம்ம் என்பது ஒரு புரட்சியை ஏற்படுத்தி உலக சந்தையையே மாற்றி அமைக்கும் திறன் படைத்தது என்றும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கவும் பல நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் எனவே தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த தொழில்நுட்பம் குறித்த மேல் படிப்பை படித்தால் கண்டிப்பாக நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version