தமிழ்நாடு

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது

Published

on

ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்தம் செய்யக்கூடாது என கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ஒரு சில கல்லூரிகளில் ஆசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டுமென நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்ப்பந்தம் செய்ய கூடாது என்றும் ஆன்லைன் வகுப்புகளை வீட்டிலிருந்தபடியே ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகளை கல்லூரிக்கு வந்தே நடத்த வேண்டும் என ஒரு சில கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்து வரும் நிலையில் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியர்கள் கல்லூரிக்கு வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை அடுத்து கல்வி இயக்குனர் இந்த சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version