இந்தியா

நோ இண்டர்நெட்! ஒட்டகத்தில் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள் – வீடியோ பாருங்க!….

Published

on

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

ஆனால், அதற்கும் இண்டர்நெட் வசதி இருக்கும் ஸ்மார்ட்போன் வேண்டும். வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இன்னும் குடிசைகளில் வசிக்கும் ஏழை குழைந்தைகளுகு ஸ்மார்ட்போனே எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. அப்படியே இருந்தாலும், பல கிராங்களில் இணையதள வசதி கிடையாது.

இந்நிலையில், ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு இணைய வசதி இல்லாததால் ஆசிரியர்கள் ஒட்டகத்தில் மாணவரக்ளின் வீட்டிற்கே சென்று பாடம் கற்பித்து வருகின்றனர். 9 முதல் 12ம் வகுப்பு வரை வாரத்தில் 2 நாட்கள் அவர்கள் பாடம் எடுக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த ஆசிரியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Trending

Exit mobile version