தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? தேர்வு வாரியம் அறிவிப்பு!

Published

on

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ஏராளமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடங்கும் என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நவம்பர் இரண்டாவது வாரத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என்றும் மொத்தம் உள்ள 9,484 பணியிடங்களை நிரப்புவதற்கான 2022-ம் ஆண்டுக்கான தேர்வு முழு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அட்டவணையின் படி ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை ஆசிரியர்கள் தேவை. ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதி உள்பட அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அரசு கலை கல்லூரிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதை அடுத்து இந்த பதவிகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த முழு அட்டவணை இதோ:

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version