தமிழ்நாடு

3 மாதங்களாக சம்பளம் போடவில்லை: கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை!

Published

on

மூன்று மாதங்களாக சம்பளம் போடாததால் வட்டார கல்வி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ஆசிரியை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து அவர் அவ்வப்போது வட்டார கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய சம்பளம் குறித்து கேட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு சரியான பதில் வரவில்லை என்றும் சம்பளமும் வரவில்லை என்றும் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை வட்டார கல்வி அலுவலகத்தில் நுழைந்து சூறையாடிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட்டார கல்வி அலுவலகத்தில் மேஜைமேல் இருந்த கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் இதர ஆவணங்களை கீழே தள்ளி உடைத்து நொறுக்கிய அந்த ஆசிரியை மூன்று மாதங்களாக சம்பளம் போடவில்லை, எனக்கு ஒரு பதில் சொல்லும் வரை யாரும் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் வட்டார கல்வி அலுவலகத்தில் நுழைந்து அலுவலத்தில் உள்ள பொருள்களை சூரையாடிய ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version