இந்தியா

ஹிஜாப்பை கழட்டிட்டு உள்ள வாங்க!.. மாணவிகளிடம் கூறும் ஆசிரியர்(வீடியோ)..

Published

on

இஸ்லாம் மதத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உடலை மூடும் ஹிஜாப்பை அணியக்கூடாது என கர்நாடகாவில் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சர்ச்சையாக மாறி போரட்டமாக மாறியது.

கல்லூரி மாணவர்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் காவி துணியை அணிந்தபடி கல்லூரி மற்றும் பள்ளிகளுக்குள் புகுந்து ‘ஜெய் ஸ்ரீரம்’ என முழங்கி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் புகார் எழுந்தது. ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த பிரச்சனையை ஆற வைக்க கர்நாடகாவில் சில நாட்களுக்குள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது விடுமுறு முடிந்து இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட துவங்கியது.

இந்நிலயில், ஒரு அரசு பள்ளியின் வாசலில் நிற்கும் ஒரு ஆசிரியர் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளிடம் அதை கழற்றிவிட்டு உள்ளே வாருங்கள் எனக்கூறும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சில பெற்றோர்கள் வகுப்பறை மட்டுமாவது ஹிஜாப் அணிய அனுமதியுங்கள் எனக்கூறும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

சில பள்ளிகளில் ஆசிரியைகளும் ஹிஜாப்பை கழட்டி வைத்து விட்டு உள்ளே சென்றனர்.

seithichurul

Trending

Exit mobile version