தமிழ்நாடு

டீ குடித்துவிட்டு மொய் வைக்கலாம்: வித்தியாசமாக கொரோனா நிதி திரட்டிய டீக்கடைக்காரர்!

Published

on

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் வகையில் டீ கடைக்காரர் ஒருவர் டீ குடித்து விட்டு மொய் வழங்கலாம் என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற பகுதியில் டீக்கடை நடத்திவரும் சிவகுமார் என்பவர் தனது கடையில் டீ குடிக்க வருபவர்களிடம் டீக்கு காசு வாங்காமல் அதற்கு பதிலாக டெல்லி கொரோனா நோயாளிகளுக்கு நிதி அளிக்குமாறு ஒரு பெட்டியை வைத்துள்ளார். மொய்ப்பெட்டி என்று கூறப்படும் அந்த பெட்டியில் டீ குடித்துவிட்டு பொதுமக்கள் தங்களால் முடிந்த தொகையை செலுத்தி விட்டு செல்கின்றனர்.

பத்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பொதுமக்கள் டீ குடித்துவிட்டு செலுத்தி வருவதாக சிவக்குமார் கூறியுள்ளார். இதுவரை 4,000 ரூபாய் மொய் வந்துள்ளதாகவும் இன்று மாலைக்குள் பத்தாயிரம் ரூபாய் மொய் வந்தவுடன் அந்த தொகையை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்து அவர் மூலமாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காகவே அவர் மொய் விருந்து விழா அழைப்பிதழ் என்ற பத்திரிகையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொய் விருந்தில் பொதுமக்கள் பலர் டீ அருந்துவிட்டு தங்களால் முயன்ற தொகையை செலுத்தி கொண்டு வருவதற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களே நிதி கொடுக்க தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அன்றாட வாழ்வுக்காக டீக்கடை நடத்திவரும் ஒருவர் மொய் விருந்து வைத்து அதன் மூலம் கிடைக்கும் தொகையை டெல்லியிலுள்ள மக்களுக்காக செலுத்த முன் வந்திருப்பதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version