வணிகம்

இந்தியாவின் 2-ம் 11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட நிறுவனம் டிசிஎஸ்!

முதன் முதலாக 11 லட்சம் கோடி ரூபாயைக் கடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 12 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், இந்தியாவின் 2-ம் 11 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இன்றைய சந்தை நேர முடிவில், டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 19.80 ரூபாய் உயர்ந்து 2,928.25 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் சந்தை முடிவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு, டிசிஎஸ் பங்குகள் விலை 2,949 ரூபாய் வரை உயர்ந்தது. அப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 11 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து இருந்தது. சந்தை நேர முடிவில், டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,098,796.53 ரூபாயாக இருந்தது.

முதன் முதலாக 11 லட்சம் கோடி ரூபாயைக் கடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 12 லட்சம் கோடி ரூபாயைக் கடந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version