இந்தியா

ஆக்சிஜன், தடுப்பூசி மீதான இறக்குமதி வரி ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடுப்பூசி கிடைப்பதும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி ரத்து என சற்றுமுன் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். எனவே ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்றும் விலையும் குறைவாகக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களுக்கான கலால் வரி மற்றும் சுகாதார செஸ் வரி தற்போதைக்கு மூன்று மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் இன்னும் அதிகம் காலம் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு என்றாலும் எந்த அளவுக்கு விரைவாக இறக்குமதி செய்யப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனாவைரஸ் தடுப்பூசியை விலைக்கு வாங்கி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக தந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version