இந்தியா

ரூ.18,000 கோடி: ஏர் இந்தியாவை டாடா வாங்கியதாக அறிவிப்பு!

Published

on

ஏர் இந்தியா நிறுவனத்தை ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் டாடாவின் பல ஆண்டு கனவு தற்போது நனவுக்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனம் ஒரு விமான நிறுவனத்தை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. ரத்தன் டாட்டாவின் கனவு திட்டமான இந்த திட்டம் கடந்த பல ஆண்டுகளாக நிறைவேறாமலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டம் அடைந்ததை அடுத்து அதை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முன்வந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்த பட்டது என்பதும் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களது சம்பளம் உள்பட அனைத்து வசதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவின் மொத்த கடன் தொகையான ரூ.61,562 கோடியில் ரூ.46,260 கோடியை செலுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்றும் ரூ.15,300 கோடி கடனுக்கான பொறுப்பை டாடா நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து கட்டப் பேச்சுவார்த்தைகளும் முடிந்து தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா கைப்பற்றியதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரூபாய் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாட்டா சன்ஸ் நிறுவனத்துக்கு ஏர் இந்தியா கைமாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை எப்படி வழிநடத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version