ஆட்டோமொபைல்

ஆன்லைனில் கார் விற்பனை: டாடாவின் புதிய முயற்சி!

Published

on

ஆன்லைனில் கார் விற்பனை செய்யும் முயற்சியை முதல் முதலாக டாடா நிறுவனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் டாடா நிறுவனம் டாட நியூ என்ற செயலியை அறிமுகம் செய்தது என்பதும் இந்த செயலியில் டாட்டா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்பு பொருள்களும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது .

மளிகை பொருட்கள், காய்கறிகள் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்துமே இந்த ஒரே செயலியில் கிடைக்கும் என்பதால் இந்த செயலிக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் டாடா நிறுவனம் கார் உற்பத்தியில் இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனமாக இருந்து வரும் நிலையில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தையும் செயலியில் கொண்டு வரும் பணியை தொடங்கி விட்டதாகவும் அடுத்த சில மாதங்களில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா நியூ செயலில் இணைக்கப்படும் என்றும் டிஜிட்டல் சிஇஓ பிரதீப் தெரிவித்துள்ளார் .

அதுமட்டுமின்றி தனிஷ்க், டைட்டன் போன்ற பிராண்டுகளையும் டாடா நியூ செயலியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இனிமேல் கார் வாங்க வேண்டுமென்றால் ஷோரூம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் நமது வீட்டின் முன்பே கார் வந்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version