இந்தியா

இந்தியாவில் 100 ஆப்பிள் ஸ்டோர்கள்.. டாடாவின் வேற லெவல் திட்டம்!

Published

on

டாடா குழுமம் விரைவில் இந்தியாவில் 100 ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .

ஏற்கனவே டாடா குழுமம் க்ரோமா என்னும் ஸ்டோர்களை நாடு முழுவதும் நடத்தி வரும் நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்காக பிரத்தியேகமாக ஸ்டோர்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டமாக ஆப்பிள் தயாரிப்புகளை மட்டுமே விற்கும் 100 ஆப்பிள் ஸ்ரோர்களை தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த ஸ்டோர்கள் ஒவ்வொன்றும் 500 முதல் 1,000 சதுர அடி வரை இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

டாடா குழுமத்தால் திறக்கப்படும் ஆப்பிள் ஷோரூம்கள் முக்கிய நகரங்கள் மற்றும் கடை வீதிகளில் அமையவிருப்பதாகவும், இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

டாடா குழுமம் இந்தியாவில் ஆப்பிள் ஷோரூம்களை திறந்தால் இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவில் தற்போது ஐபோன் விற்பனை அதிகமாக விற்பனையாகி வருவதாகவும், இதனை மேலும் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் டாடா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆப்பிள் ஸ்டோர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களிலுள்ள மால்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி பிரிமியம் ஷோரூம்களும் திறக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது. ஆப்பிள் பிரத்யேக ஷோரூம் அமைக்கும் பணிகளை ஏற்கனவே டாட்டா குழுமம் தொடங்கி விட்டதாகவும் ஒவ்வொரு கடையின் மாடல், கடை அமைப்பது எப்படி மற்றும் நிபந்தனைகள் ஆகியவை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் மும்பையில் வரும் மார்ச் மாதம் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version