வணிகம்

தமிழகத்தில் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் போன் உதிரிபாகங்கள் தாரிக்கும் ஆலை அமைக்கும் டாடா!

Published

on

டாடா குழுமம், தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் போன் உதிரிப்பாகங்கள் மற்றும் அசம்பிளிங் ஆலையை அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா குழுமத்தின் இந்த முதலீட்டிற்காக, தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் 500 ஏக்கர் நிலத்தை அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த இடத்தில் டைட்டன் நிறுவனத்தின் பொறியியல் மற்றும் ஆட்டோமெஷன் பிரிவும் அமைய உள்ளது.

வாட்ச் உற்பத்தி நிறுவனமான டைட்டன் நிறுவனத்தில், 27.88 சதவீத பங்கு தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வைத்துள்ளது.

டாடா குழுமத்தின் இந்த புதிய தொழிற்சாலையில் ஐபோன் உற்பத்தி செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டாடா குழுமம், தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது உன்மைதான், ஆனால் ஒரு தனிப்பட்ட பிராண்டின் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இந்த ஆலை அமைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையிலிருந்து ஃபாக்ஸ்காம் விஸ்ட்ரான், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபோனை உற்பத்தி செய்து வருகின்றன. டாடா குழுமத்தின் போன் உதிரிபாகங்கள் ஆலை இவர்களுக்கு உதவும் வகையில் உதிரிப்பாகங்களை உருவாக்கும், போன் அசம்பிளிங் செய்யும் என்று கூறப்படுகிறது.

எது எப்படியோ, டாடாவின் இந்த முதலீட்டால் தமிழக இளைஞர்களுக்குக் கூடுதலான வேலை
வாய்ப்பு கிடைக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version