இந்தியா

இனிமேல் ஐபோன் என்றால் டாடா தான்.. ரூ.4290 கோடி முதலீடு

Published

on

டாடா நிறுவனம் இந்தியாவில் பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது என்பதும் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்துமே தரமானதாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. மேலும் டாடா தயாரிப்பு என்றாலே மக்கள் மத்தியில் ஒரு மதிப்பு மரியாதையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக டாடா நிறுவனம் புதுப்புது தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது பெங்களூரில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐபோன் உற்பத்தி ஆலையை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலம் எடுக்க திட்டமிட்ட்டுள்ளதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் முதல் நிறுவனமாக இருக்கும் இந்நிறுவனத்தை சுமார் ரூ.4920 கோடி மதிப்பில் டாடா நிறுவனம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தாய்லாந்து நிறுவனமான விஸ்ட்ரான் கார்ப் நிறுவனத்தை டாடா வாங்கினால் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் டாடா தான் நம்பர் ஒன் என்ற இடத்தை பெரும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பெங்களூருவில் உள்ள தைவானின் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் ஆலையை வாங்கும் பணியை டாடா குழுமம் முடித்துவிடும் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மூன்று தைவானிய ஐபோன் உற்பத்தியாளர்களில் விஸ்ட்ரான் ஒன்றாகும். ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, விஸ்ட்ரான் கார்ப் நிறுவனத்தின் ஆலையை டாடா வாங்கினால், இந்தியாவில் முதல் உள்நாட்டு ஐபோன் தயாரிப்பு நிறுவனமான டாடா இருக்கும்.

டாடா குழுமம் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தை இப்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஸ்ட்ரான் கார்ப் நிறுவனத்தை டாடா கைப்பற்றினால் அந்த ஆலையின் 10,000 தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version