வணிகம்

ஏர் இந்தியாவை வாங்க ஏலத்தில் பங்கேற்கும் டாடா குழுமம்!

Published

on

கடனில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை, சுமுக பேச்சுவார்த்தையுடன் தங்களது கட்டுப்பாட்டில் இந்திய அரசு எடுத்துக்கொண்டது. பின்னர் அதற்கு ஏர் இந்தியா என்று பெயர் மாற்றம் ஆனது.

டாடா குழுமம் ஏர் ஏசியா இந்தியாவுடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டு வருகிறது. இன்னொரு பக்கம் சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தரா என்ற விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை டாடா குழுமம் நடத்தி வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 62 ஆயிரம் கோடி கடன் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு எடுத்த முயற்சியின் கீழ் 23,286 கோடி ரூபாயாக அது குறைக்கப்பட்டுள்ளது.

இப்போது ஏர் இந்தியாவில் இந்திய அரசுக்கு உள்ள 100% பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version