இந்தியா

அமைச்சரவை ஒப்புதல்: டாடா வசம் செல்கிறது ஏர் இந்தியா!

Published

on

கடந்த 1950 களில் விமான நிறுவனம் டாட்டாவின் வசம் இருந்த நிலையில் 1952ஆம் ஆண்டு விமான நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டது. அதன் பின்னர்தான் ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் தற்போது பெரும் நஷ்டத்தில் இருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை தன்வசப்படுத்த டாடா நிறுவனம் முயற்சித்து வந்தது என்பதும் இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு டாட்டா சன்ஸ் அளித்த ஒப்பந்தப் புள்ளியை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவிடம் வழங்குவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஊழியர்களின் ஊதிய,ம் பென்ஷன் பணம் உள்பட அனைத்து பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் டாட்டா நிறுவனம் ஏர் இந்தியாவின் பெரும்பாலான பங்குகளை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விமான நிறுவனம் தனது கையை விட்டு போன பிறகு டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா கடந்த பல ஆண்டுகளாக புதிய விமான நிறுவனத்தை தொடங்க முயற்சித்து வருகிறார். அவருடைய கனவு தற்போதுதான் நிறைவேறப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version