இந்தியா

24 கண்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்கிறது டாடா!

Published

on

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் கடும் சிக்கலில் உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து 24 கண்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள் விமானம் மூலம் விரைவாக கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. டெல்லி மும்பை போன்ற பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் சிக்கலில் உள்ளனர்.

இதனை அடுத்து டாடா நிறுவனம் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து 200 டன் முதல் 300 டன் வரை திரவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து 24 கன்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய முடிவு செய்து உள்ளது. ஒரு கண்டெய்னரில் 60 சுமார் ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆக்சிஜன் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை முற்றிலும் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு வைரஸ் பரவலின்போது டாடா நிறுவனம் ரூ.1500 கோடி பிரமர்கள் நிவாரண நிதிக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version