இந்தியா

ரூ.7000 கோடிக்கு பிஸ்லெரி நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை: டாடா எடுத்த அதிரடி முடிவு..!

Published

on

பிஸ்லரி நிறுவனத்தை ரூபாய் 7000 கோடிக்கு டாடா நிறுவனம் வாங்க கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது திடீரென பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லேரியை வாங்குவதற்கு டாட்டா குழுமம் நடத்தி வந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்ததாகவும் பிஸ்லரி நிறுவனத்தை வாங்க வேண்டாம் என டாடா குழுமம் திடீரென முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிஸ்லரி நிறுவனம் கடத்த 1985 ஆம் ஆண்டு மும்பையில் இந்தியாவில் கால் வைத்தது. மினரல் வாட்டர், குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம் இந்தியாவில் வலுவான வர்த்தகத்தை கொண்டிருந்தது என்பதும் 1999 ஆம் ஆண்டு கோகோ கோலாவின் சில பிராண்டுகளின் விற்பனை உரிமையை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிஸ்லரி நிறுவனத்தை விற்பனை செய்ய நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் சவுகான் சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்தார். தன்னுடைய மகள் இந்த தொழிலில் ஆர்வம் காட்டவில்லை என்பதாலும் தனக்கு வயதாகி விட்டதாகவும் அந்த நிறுவனத்தை விற்க அவர் முடிவு கொண்ட நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி டாடா உள்பட பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பிஸ்லரி நிறுவனத்தை வாங்க முன் வந்தன.

குறிப்பாக பிஸ்லரி குழுமத்தின் டாடா கன்சூமர் புரொடக்ட்ஸ் என்ற நிறுவனம் பிஸ்லரியை வாங்குவதற்கு பல மாதங்களாக பேச்சுவார்த்தையில் நடத்தி வந்தது. மேலும் ரமேஷ் சவுகான் அவர்களும் டாடாவிற்கு தனது நிறுவனத்தை விற்கவே விரும்பினார்.

இந்த நிலையில் தற்போது பிஸ்லரி – டாடா பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனவே டாடா நிறுவனம் பிஸ்லரி நிறுவனத்தை வாங்க போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. இதனை அடுத்து ரிலையன்ஸ் உள்பட வேறு சில நிறுவனங்கள் பிஸ்லரி நிறுவனத்தை வாங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version